கோவில்பட்டியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிறந்தநாள் விழா - கோவில்பட்டியில் மதிமுக சார்பில் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடி மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிறந்தநாளை தமிழர்களின் தலைநிமிர் நாள் என கொண்டாட வேண்டும் என தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியில் அமைந்துள்ள நீடிய வாழ்வு முதியோர் இல்லத்தில் மத்திய ஒன்றிய மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ் மற்றும் விநாயகர் ரமேஷ் உள்ளிட்டோர். முதியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர்..
இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு இலவசமாக வேட்டி சேலைகள் வழங்கியும், மதிய உணவாக அசைவம் உணவு ஏற்பாடு செய்து அவர்களுக்கு சிறப்பாக உணவளித்து உபசரித்தனர்.. தங்களுக்கு உணவளித்த மதிமுகவினருக்கும், பொதுச் செயலாளர் வைகோ விற்கும் இறை வணக்க பாடல்கள் மூலம் நன்றி தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை