Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயிலில் மாங்கனித் திருவிழா.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயிலில் மாங்கனித் திருவிழா நடைபெற்றது. 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் இறைவன் அருளால் அதிமதுர மாங்கனியைப் பெற்று அதை தனது கணவருக்கு தந்ததாக கூறப்படும் நாளே மாங்கனித்  திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 


    இதையொட்டி கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்கள் சன்னதியில் மாங்கனி வரவழைத்தல் விழா நடைபெற்றது. இதையொட்டி 63 நாயன்மார்கள் சன்னதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு மா, மஞ்சள், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருள்கள் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை அப்பர் அடிமை தெய்வத்திரு. கண்ணுச்சாமி சிவா தொண்டர்கள், பிரதோஷம் குழுவினர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    இந்த நிகழ்வின் கண்ணொளியை கிளிக் செய்து காணலாம்

    👇 👇👇👇👇👇

    https://youtu.be/rwim0nSxy1k

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad