• சற்று முன்

    ஆடி வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் பகுதி அம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு


    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால் தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அர்ச்சகர் சண்முகவேல் பூசாரி அர்ச்சனை செய்து பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இக்கோவிலில் பெண்கள் கூழ் காய்ச்சி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி பக்தர்களுக்கு கூழ் வழங்கினார்கள்.கோவில் செயல்அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி,வசந்த் மற்றும் பக்தர்கள்  ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரௌபதிஅம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது பக்தர்களுக்கு கூழ் வழங்கினர்.இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன்,திருப்பதி, ஜவஹர்லால்,குப்புசாமி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் பத்ரகாளியம்மன் கோவில், உச்சிகாளியம்மன் கோவில் தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை,பூஜைகள் நடைபெற்றது.


    மதுரை நகரில் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல கோயில்களின் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டு, இங்குள்ள துர்க்கை அம்மனுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .இதே போன்று, தாசில்தார் நகர் மேலமடை அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில் , விஷ்ணு துர்க்கை அம்மனுக்கும், வராஹியம்மனுக்கும், கோயில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதே போன்று, மதுரை அண்ணா நகர் யானைக் குழாய் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதைத் தொடர்ந்து, அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இதே போல, மதுரை சாத்தமங்கலம் ஆவின் பாலவிநாயகர் ஆலயத்தில், ஈஸ்வர பட்டர் தலைமையில், இக்கோயில் அமைந்துள்ள துர்க்கை மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து அத்தனை வழிபாடுகளும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad