ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம், சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவில் இருந்து சென்றது:
மதுரை மாவட்டம், அழகர் கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழா தேரோட்டத்தில் பவனி வரும் ஆண்டாள் நாச்சியாருக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் இன்று காலை அழகர்கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்வின்போது, அழகர்கோவில் துணை ஆணையர் மு. ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன், கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், உடனிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை