வேலூர் மாவட்டத்தில் 50 ஆண்டு கழித்து மீண்டும் பள்ளியில் ஒருங்கிணைந்த மாணவர்கள்
மீண்டும் பள்ளிக்கு வருவோம் என்று வேலூரில் வெங்கடேஸ்வரா பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த மாணவர்கள் இன்று சந்தித்து ஆசிரியர்களுக்கு கோப்பை பரிசுகளை வழங்கி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி வாழ்த்துக்களை பெற்றனர்.
வேலூர்மாவட்டம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடத்தபடும் திரு வெங்கடேஸ்வரா மேல்நிலைபள்ளியில் 1973- 1974 ஆம் ஆண்டு கல்வி ஆண்டுகளில் எஸ்.எஸ்.எல்.சி பயின்ற முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பள்ளியில் குடும்பத்தினருடன் சந்திப்பு நிகழ்ச்சியானது நடந்தது இதில் அப்போது பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து அவர்களுக்கு சால்வை அணிவித்தும் கோப்பைகள் வழங்கி காலில் விழுந்து மாணவர்கள் ஆசீர்வாதம் வாங்கி வாழ்த்துக்களையும் பெற்றனர்.
இதில் பள்ளியின் முதல்வர் நெப்போலியன் பழைய மாணவர்களை வரவேற்று சந்திப்பிற்கு உதவினார் இதில் அப்போது பயின்ற மாணவர்கள் அதிகாரிகளாகவும் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்து மகிழ்ச்சிகளை பரிமாறிகொண்டனர் மேலும் வருங்காலங்களில் பள்ளிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர் கடந்த 6 மாதங்களாக தன்னுடன் படித்த மாணவர்களையும் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த சந்திப்பை 50 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை