பழனி வரதமாநதி அணை அருகே ஒற்றை யானை உலா
பழனி வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் ஒற்றை யானை உலா. இரவு நேரத்தில் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று வனத்துறையினர் தடை
வரதமாநதி அணை அருகே கொடைக்கானல் மலைப்பாதையில் ஒற்றையானை உலா வந்தது. இதை அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வனத்துறையினர் கூறுகையில், இந்த ஒற்றை யானையால் பெரிய அளவில் சேதம் ஏதுமில்லை. எனினும் யானை நடமாட்டத்தால் அணை பகுதி தோட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது
செய்தியாளர் : பாலமுரளி
கருத்துகள் இல்லை