• சற்று முன்

    தேனியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது தடை செய்யப்பட்ட 198 லாட்டரி சீட்டு பரிமுதல்



    தேனி மாவட்டம்  லோயர்கேம்ப் சார்பு ஆய்வாளர் மூவேந்தன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் அருகே கையில் துணிப்பையுடன் முதியவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 198 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி (வயது 60) என்பதும், விற்பனைக்காக லாட்டரி சீட்டுகளை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்


    செய்தியாளர்: பாலமுரளி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad