வேடசந்தூர் அருகே உள்ள விருதலைப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (50). விவசாயியான இவர்,பசுமாடு ஒன்றை தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அந்த பசுமாடு, தோட்டத்தில் உள்ள 60 அடிஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் மாட்டை கயிறுகட்டி மீட்டனர்.
கருத்துகள் இல்லை