போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (26.06.2023) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் "போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் அலுவலக அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
"போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி"
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்
செய்தியாளர் : பாலமுரளி
கருத்துகள் இல்லை