கள்ள சந்தையில் மது விற்பனை 3 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கள்ள சந்தையில் மது பாட்டில் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, கீழக்கரை காவல் சார்பு ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் வந்து சென்றனர் .அப்போது புதிய பேருந்து நிலையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்த ரமேஷ் என்பவரை 20 மதுபாட்டில், இந்து பஜார் பகுதியில் 10 மது பாட்டில்களுடன் சுந்தரம் ஆகியோரை கைது செய்தனர். கள்ளச்சந்தையில் தொடர்ந்து மது பாட்டில் விற்று வந்த இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே வழக்கு உள்ளது. தொடர் சோதனையில், ஈசிஆர் சந்திப்பு பகுதியில் குட்கா விற் பனை செய்த ராம்குமார் என்பவர் மீது வழக்கு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை