Header Ads

  • சற்று முன்

    நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தனக்கன்குளத்தில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்


    நம்ம ஊரு சூப்பர் திட்டத்தை தனக்கன்குளத்தில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சிறப்புரை., அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த 3 மாணவிகளுக்கு தலா 2000 அன்பளிப்பு.


    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் பஞ்சாயத்தில் நம்ம ஊரு சூப்பர் என்ற தமிழக அரசின் திட்டத்தை பொதுமக்களிடம் எடுத்து சொல்லும் வகையில் மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் தலைமையில் துவக்கி வைத்தனர். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் குப்பை இல்லாத கிராமமாகவும், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், பிளாஸ்டிக்கில்லா கிராமமாக மாற்றி காட்டுவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க அவர் முன்னிலையில் கிராம மக்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    மேலும்., கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்க இலவசமாக பிளாஸ்டிக் வாழிகளும் வழங்கப்பட்டன. மேலும்., கிராமத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியதன் பேரில், தனக்கன்குளம் பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் டூ பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவிகளுக்கு தலா ரூபாய் 2000/- வீதம் வழங்கியும், அவர்களுக்கு சால்வை அணிவித்தும்,  மதுரை ஆட்சியர் அவர்களை கௌரவித்தார்.

    தொடர்ந்து., கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கூறுகையில்.

    கிராம மக்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்., சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் இயற்கை குறித்தும் காந்தியடிகள் பேசியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கொடிய தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உலகமே அஞ்சி இருந்ததற்கு மனிதனின் பேராசை தான்., அனாவசியமாக இயற்கைக்கு மாறாக சேதப்படுத்தியதன் விளைவிக்க தான் இயற்கையில் மாற்றங்கள் நிகழ்கிறது எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும் மக்கும் குப்பை மக்கா குப்பை என்றும் தனித்தனியே பிரித்தெடுத்து பயன்படுத்த வேண்டும் தேவையற்ற உபகரணங்களை வாங்குவது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் பேசினார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad