மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து! தூத்துக்குடியில் SDPI கட்சி கண்டன ஆர்பாட்டம் !
SDPI கட்சி தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மணிப்பூரில் கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 10.05.2023 இன்று புதன்கிழமை மாலை திரேஸ்புரம் பகுதி மேட்டுப்பட்டி திடலில் மாவட்ட பொதுச்செயலாளா் காதா் முகைதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் மின்னல் அம்ஜத் வரவேற்புரை ஆற்றினார். இதில் sdpiகட்சியின் மாவட்ட தலைவா் முஹம்மது உமர், அருட் தந்தை பென்ஜமின், சுந்தரிமைந்தன், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா பாபு, தமிழ் விடியல் கட்சி மா.செயலாளா் சந்தனராஜ், தமிழ்நாடு மக்கள் கட்சி மாநில தலைவா் காந்தி மள்ளர், தமிழ் புலிகள் கத்தாா் பாலு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
தமுமுக மா.செயலாளா் அலி அக்பர் திரு இருதய நண்பர்கள் இயக்கம் தங்கையா, PUCL பிரின்ஸ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டனா். இறுதியாக தொகுதி தலைவா் காதர் ஹீசைன் நன்றியுரை நிகழ்த்தினாா்கள். மாவட்ட செயலாளர் மைதீன் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஷேக் முகைதீன் அலி, தொகுதி செயலாளா் ரியாஸ், தொகுதி இனைச்செயலாளர் நல்லசம்சு கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை