Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி கிராம மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்


    ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிடக் கோரி கிராம மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இழுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தியாகிய லீலாவதி நகர் இந்த பகுதியில் கடந்த 2002 ஆம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பாக அப்பகுதியில் உள்ள 725 பயனாளிகளுக்கு 27 ஏக்கர் நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது . 



    சில அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் அதில் கட்டிடம் கட்ட முடியாமல் இலவச வீட்டு மனை பட்டா பெற்றவர்கள் தவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில்  இலவச வீட்டுமனை பட்டாக்களை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அதனை கைவிட வலியுறுத்தி இளிப்பு யுரேனி ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் உத்தடு ராமன் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பெற்றவர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர் ..இலவச வீட்டு மனை பட்டாவை ரத்து செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர் மேலும் தங்களது கோரிக்கை மணைவனை கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வழங்கினர் . வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad