வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக மக்கள் மருத்துவர் 5ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் பெயரை வடசென்னையில் ஏதேனும் ஒரு மெட்ரோ ரயில் நிலையத்திற்க்கு சூட்டக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வடசென்னை மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனர் தலைவர் பா.ஜெய்ஹரி தலைமையில் வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் 5ரூபாய் டாக்டர் எஸ்.ஜெயசந்திரன் பெயரை சூட்டகோரியும்,மணிமண்டபம் கட்ட வேண்டியும்,திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு அவரது பெயரை சூட்டப்பட வேண்டுமென மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் எம்.கே.பாபுசுந்தரம்,இந்திய மீனவர் சங்கம் பரதவர் தலைவர் எம்.டி.தயாளன்,தமிழ்நாடு நேந்தாஜி சமூக சேவை இயக்கம் எஸ்.வன்னியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தும்.சிறப்பு அழைப்பாளராக மேன் ஆப் மில்வியனர் பத்மஶ்ரீ பாலம் கல்யாண சுந்தரம் வருகைதந்து மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயந்திரன் பெயரை வடசென்னையில் உள்ள ஏதேனும் ஒரு மெட்ரோ இரயில் நிலையத்திற்கு சூட்டககோரி மேடையில் சிறப்புரையாற்றினார்.
நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்கள்,சமூக ஆர்வலர்கள்,மருத்துவர்கள்,பொதுமக்கள்,மாணவ,மாணவியர்கள் பலர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை