தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு பெருவிழா ஏஆர்எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத் தலைமை தாங்கினார். இதில் சமூக நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் திருச்செந்தூர் பாலசுப்ரமணிய குருக்கள், அஷ்ரப் அலி, பேராசிரியை பாத்திமா பாபு, சுந்தரி மைந்தன், சிவனடியார் முத்து கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நகர வர்த்தகரின் மத்திய சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் பாஸ்கரன், பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு பிரிவு வடக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, தமிழ்நாடு மக்கள் கட்சி தலைவர் காந்தி மள்ளர், காயல்பட்டினம் நிஸ்தார் சேக் முகையதீன், தெர்மல் ராஜா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை