• சற்று முன்

    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் கூச்சல் குழப்பதில் முடிவு பெற்றது


    கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்ட அரங்கில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டம்  - திட்டபணிகளுக்கு  நிதி சரிவர  ஒதுக்கீடு செய்வதில்லை அதிகளவில் முறைகேடு நடைபெறுவதாவும் திமுக அதிமுக கவுன்சிலர்கள்   மாறி மாறி குற்றச்சாட்டு வைத்ததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் அதிமுகவை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி முன்னிலையில்  காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியது... 2018 19 ஆண்டுகளில் டெண்டர் விடப்பட்டு முடிவுராத பணிகளை ரத்து செய்து அந்த அந்த பணிக்கான நிதியை திரும்ப பெற்று கவுன்சிலர்களுக்கு தொகுதி பணிகளை மேற்கொள்ள அந்த நிதியை ஒதுக்கீடு வேண்டும்  எந்தப் பணியை மேற்கொண்டாலும் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பணியை மேற்கொள்ள வேண்டும் வலியுறுத்தினர். தற்காலிக பணி நியமனம் மற்றும் முக கவசம் வாங்கியவையில் முறையீடு உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அதிமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமர் சுயேட்சை செந்தில்குமார் திமுக திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பூமாரி திமுக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுந்தரேஸ்வரி உள்ளிட்டோர் மாறி மாறி ஒன்றிய குழு தலைவரிடம் குற்றச்சாட்டுகளை வைத்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad