• சற்று முன்

    கோவில்பட்டி அருகே சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அன்னை தெரசா கபாடி அணி நடத்தும் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி

    கோவில்பட்டி அருகே சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அன்னை தெரசா கபாடி அணி  நடத்தும் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்ம்பட்டி கிராமத்தில் சரோ மெமோரியல் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் அன்னை தெரசா கபாடி அணி  நடத்தும் முதலாம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. மாநில அளவிலான  கபடி போட்டிகளில் 51 அணிகள் பங்கேற்றனர். கபடி போட்டியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் முதல் பரிசினை 20,0001 ரூபாய் வழங்கினார்.இரண்டாம் பரிசினை மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா 15,0001.கோப்பையை வழங்கினார்.


    மூன்றாம் பரிசை 15,0001 ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் வழங்கினார். நான்காம் பரிசை நகர மன்ற உறுப்பினர் கவியரசன் 13,0001 கோப்பையை வழங்கினார். ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஐந்தாம் பரிசை 12,0001 வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார்,ஒன்றிய செயலாளர் அன்புராஜ், முன்னாள் ஊராட்சி குழு தலைவி சத்யா, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன்,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கடம்பூர் விஜி, கடம்பூர் மாயா துரை, கோபி,பழனி குமார், சண்முகக்கனி,பாலாஜி உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad