கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் - கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கி. மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கனிமொழி கருணாநிதி பேசுகையில் இப்பகுதியில் குடிநீர் சாலை உள்ளிட்ட வசதிகளை விரைவில் ஏற்படுத்தி தரப்படும் எனவும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பேசினார். இம் முகாமில் கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவர் சுப்ரமணியன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி கயத்தாறு வட்டாட்சியர் சுப்புலட்சுமி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை