தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டினார்.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 19வது தேசிய சிலம்பம் போட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்தது. இதில், தமிழக அணிக்காக, தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் மற்றும் சபரீஸ் ஜெயன் சிலம்பம் பள்ளி சார்பில் 27 மாணவ, மாணவிகள் சிலம்பம் போட்டி கலந்து கொண்டனர். இதில், 4 தங்கம், 13 வெள்ளி, 9 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.
தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்க செயலாளர் சோலை நாராயணன்,பொருளாளர் காயத்ரி, துணை தலைவர் உமா சங்கரி, பயிற்சி ஆசிரியர் கணபதி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை