கோவில்பட்டி அருகே தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு
கோவில்பட்டி அருகே தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு -ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் JSW சார்பில் பல்வேறு இடங்களில் காற்றாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கே.குமரெட்டையாபுரம் கிராமத்தில் காற்றாலை மின் விசிறி அமைக்கும் பணிக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் கோவில் வழியாக உயர் அழுத்த மின்கம்பங்கள் உயர் மின்னழுத்த கம்பிகள் கொண்டு செல்வதற்காக மின்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. இப்பணியை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தடுத்து நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் இது தொடர்பாக குடியிருப்புப் பகுதிகள் வழியாக உயர் மின்னழுத்த கம்பிகள் கொண்டு செல்லக்கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் சட்டமன்ற உறுப்பினரிடம் பலமுறை இது குறித்து தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை