மதுரை வலையங்குளம்ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா
சுகாதாரத் துறை அமைச்சர் மா . சுப்ரமணியன் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெளி நோயாளிகள் பிரிவுகளுக்கான ரூபாய் 48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
ராஜா கூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், சுகாதாரத் துறை இணை இயக்குனர் Dr. அர்ஜுன் குமார் கலந்து கொண்டு காணொளி காட்சி மூலம் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள வெளிநகரில் பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தனர். வலையன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை வட்டார மருத்துவர் Dr. தனசேகரன் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேட்டையன், சுகாதார மேற்பார்வையாளர் தங்கச்சாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை