Header Ads

  • சற்று முன்

    எங்கள் வேலை எங்களுக்கு தூய்மை பணியாளர்கள் பெருந்திரள் முறையீட்டு போராட்டம்.



    கோவையில் இன்று மதியம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எங்கள் வேலை எங்களுக்கு எங்கள் ஊதியம் எங்களுக்கு என்ற முழக்கத்தை முன்வைத்து பெருந்திரள் முறையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. செயலாளர் என்.செல்வராஜ் தலைமை தாங்கினார். 

    இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோயமுத்தூர் மாநகராட்சியில் சுமார் 6000க்கும் மேற்பட்ட தூய்மை பணி தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள் அதில் 3,600 பேர் தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள். மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியை தனியாருக்கு டெண்டர் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பணியில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட உள்ளதாகவும். வெளிமாநில தொழிலாளர்களை வைத்து வேலை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    எங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எல்லா செலவும் சேர்த்து வருடம் 50 கோடி ரூபாய் மட்டுமே செலவாகிறது. 

    கோவை மாவட்ட நிருபர் : அக்னிபுத்திரன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad