உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு - கோவில்பட்டியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இவ் விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் ஸ்ரீ மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கொடியசைத்து இப் பேரணியை துவக்கி வைத்தனர். காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய பகுதிகளில் வழியாக காமராஜர் சிலை வரை சென்றடைந்தன இப் பேரணியின் போது பள்ளி மாணவ மாணவிகள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும், செல்போன், சிகரெட் புகையிலை உள்ளிட்ட பொருள்களினால் ஏற்படும் புற்றுநோய் குறித்தும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்றனர்.. இப்பேரணியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..
கருத்துகள் இல்லை