நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி 7வது வார்டு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கை ஆ. ராசா எம்.பி. திறந்து வைத்தார்
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் எம்.பி. நிதியில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கை தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தொடங்கி வைத்தார். தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் கா.ராமசந்திரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார்,நகர செயலாளர் ஜார்ஜ், நகரமன்ற உறுப்பினர் டாக்டர்.விசாலாட்சி,திமுக பிரமுகர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசாவுக்கு தி.மு.க பிரமுகர் விஜயகுமார் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை