• சற்று முன்

    ராஜபாளையத்தில் நடந்த தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை போட்டியில் 3 மாவட்டங்களில் இருந்து பங்கேற்பு


    ராஜபாளையத்தில் நடந்த தென்மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை போட்டியில் 3 மாவட்டங்களில் இருந்து 18 பள்ளிகளை சேர்ந்த 832 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தென்மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை போட்டி நடைபெற்றது. தனியார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த போட்டியில் மதுரை, தென்காசி, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் செயல்படும் நர்சரி பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி என 18 பள்ளிகளில் பயிலும் 832 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


    ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தை போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக நடத்தப்பட்டது. 10, 12 மற்றும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு என 3 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. வில்வித்தை போட்டியில் ஒரு களத்திற்கு 3 மாணாக்கர்களும், ஸ்கேட்டிங் போட்டியில் ஒரு சுற்றுக்கு 6 மாணாக்கர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு கோப்பை மற்றும் பதக்கங்களுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    ஒட்டு மொத்த சேம்பியன் பட்டத்தை சிபிஎஸ்சி பிரிவில் ராஜபாளையம் ரமணா வித்யாலயா பள்ளி மாணவர்களும், மெட்ரிக் பிரிவில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பழம் பள்ளி மாணவர்களும், நர்சரி பிரைமரி பிரிவில் மகாத்மா வித்யாலயா பள்ளி மாணவர்களும் பிடித்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad