Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் அருகே கல்வி பொதுப்பள்ளி மாணவர்கள்மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில் அதிக பதக்கங்கள் பெற்று சாதனை


    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கல்வி பொதுப்பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கிடையேயான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை புரிந்தனர். மதுரை   மங்கையற்கரசி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டியில்  சோழவந்தான்  கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று  பன்னிரண்டு தங்கப்பதக்கங்களும், நான்கு வெள்ளிப்பதக்கங்களும்,  இரண்டு வெண்கலப் பதக்கமும்  வென்று மதுரை மாவட்டத்தில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டேக்வாண்டோ பயிற்சியாளர்  மனோஜ் குமார் ,  கல்வி சர்வதேச பொதுப்பள்ளியின் தலைவர் முனைவர்செந்தில்குமார் மற்றும் தாளாளர் குமரேஷ் பாராட்டிப் பரிசுகளை வழங்கினர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad