கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாக கூறி அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் கிராமத்தில் பட்டியல் படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு வழங்கபட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும், இதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 9 மாத காலம் ஆகியும் இதனை நடைமுறைப்படுத்த வில்லை என கூறி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிட தனி வட்டாட்சியரை கண்டித்து அம்பேத்கர் பெரியார் மார்க்சிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செண்பகராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் முறையிட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டதை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை