Header Ads

  • சற்று முன்

    மதுரை.சோழவந்தான் கால்நடை மருத்துவமனையில் சினை ஊசி பற்றாக்குறை சினை ஊசி செலுத்த லஞ்சம் கேட்பதாக புகார்


    மதுரை மாவட்டம் சோழவந்தானில்.உள்ள கால்நடை மருத்துவமனை யில்.உள்ள மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்களும் பணிக்கு முறையாக வராமல்  கையெழுத்து போட்டு.விட்டு வெளியே சென்று விடுவதாக இங்கு வரும் கால்நடை வளர்ப்போர் புகார் தெரிவிக்கின்றனர் . இதனால் இப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இங்குள்ள மருத்துவமனை உதவியாளர்கள்.சினை ஊசி செலுத்த  லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும் சினை ஊசி போடுவதற்காக இங்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு சரியான நேரத்தில் சினை ஊசி செலுத்த முடியாததால் கால்நடை  வளர்ப்பவர்கள்.மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


    பொதுவாக கால்நடைகளைப் பொறுத்தவரை உரிய காலத்தின் சினை ஊசி செலுத்தினால் தான் கர்ப்பம் தரிக்கும் அதனை கருத்தில் கொண்டு கால்நடை வளர்ப்போர் மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வந்தால் அவர்கள்
    அலைக்கழிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும்.சினை ஊசியை வீட்டில் வந்து போட்டால் ரூபாய் 500 கிடைக்கும் என்று மருத்துவமனை பணியாளர்கள் திருப்பி அனுப்பி விடுவதாக கூறுகின்றனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது சினை ஊசி பற்றாக்குறை உள்ளது அரசிடமிருந்து வந்த பிறகு தான் போடுவோம் என்றனர். கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சினை ஊசி  செலுத்தாமல் இருந்தால் கர்ப்பம் தரிக்க தாமதமாக வாய்ப்பு உள்ளது. இதனால் முறையாக சினை ஊசி செலுத்தாமல் காலம் தாழ்த்துவதால் கால்நடை வளர்ப்போருக்கு அதிக  நஷ்டம்.ஏற்பட்டு மாடுகளை விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஆகையால் இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் நேரடியாக விசாரித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்து உரிய முறையில் கால்நடை வளர்ப்பதற்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர் வி. காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad