சாத்தூர் அருகே, ரேசன் அரிசி மூடைகளை கடத்தி பதுக்கி வைத்திருந்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் - வெம்பக்கோட்டை அருகேயுள்ள செவல்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே ரேசன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், 50 மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்த, தென்காசி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (27) என்பவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை