அருந்ததியர் மக்களை இழிவாக பேசிய சீமானை கண்டித்து கோவில்பட்டியில் தமிழ் புலிகள் இயக்கம் சார்பில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் மெயின் ரோடு சாலையில் தமிழ் புலிகள் இயக்கம் மாவட்ட தலைவர் வீர பெருமாள் தலைமையில் சீமான் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது அருந்ததியர் சமுதாய மக்களை இழிவாக பேசியதை கண்டித்தும் உடனடியாக குண்டர் சட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி சாலையில் அவரது உருவ பொம்மையை போட்டு எரித்து போராட்டம் நடத்தினர் போராட்டத்தின் போது சீமானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல்துறையினர் தீட்டு எடுக்க உருவ பொம்மையை அப்புறப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை