Header Ads

  • சற்று முன்

    சோழவந்தானில் காட்டு நாயக்கர் சமூதாயத்தினரின் 63 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முளைப்பாரி திருவிழா

    சோழவந்தானில்  காட்டு நாயக்கர் சமூதாயத்தினரின் தொட்டிச்சி அம்மன், மதுரைவீரன் சுவாமிகளின் 63 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே பழங்குடியினர் குடியிருப்பு காட்டுநாயக்கர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் ,ஸ்ரீ மதுரை வீரன் சுவாமிகள் 63 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து தொட்டிச்சி அம்மன் ,மதுரை வீரன் சாமிகளுக்கு தினந்தோறும் பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை வைகை ஆற்றுக்குச் சென்று சக்தி கரகம் , பொங்கல் பானை வழிபாடு நையாண்டி மேளத்துடன் நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து புதன்கிழமை முளைப்பாரி ஊர்வலம், நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து வந்தனர் சோழவந்தானின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி ஊர்வலம் வந்து பின்னர் வைகை ஆற்றிற்கு சென்று  கரைத்தனர் கிராமிய கலை குழுவினரின் ஒயிலாட்டத்துடன் நடைபெற்றது.  விழாவிற்கான ஏற்பாடுகளை சோழவந்தான் வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சமூகத்தார்கள் செய்திருந்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad