• சற்று முன்

    தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் ஆர்பாட்டம்


    தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாபெரும்  கோரிக்கை மனு அளிக்கும் ஆர்பாட்டம் நடைபெற்றது.மாநிலத் தலைவர் V. A . பாலசுப்பிரமணி, மாநிலத் பொருளாளர் ஏழுமலை, தலைமையில் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. மாநிலச் செயலாளர் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து கே . மணி பொது செயலாளர் தமிழக இந்து சமய திருக்கோவில் வீட்டு மனை வாடகைதாரர்கள் சங்கம் உரையாற்றினார்.

    கோவில்மனையில் குடியிருப்போரை வெளியேற்றும்நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். குடியிருக்கும் இடங்களில் உண்மையான பயனீட்டாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிமை பட்டா வழங்கிடும் வகையில் உயர்மட்டக் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மானுயளித்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad