மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டில் மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலநிலை அரங்கேரியுள்ளது
நிதி அமைச்சரும் மத்திய தொகுதி எம்எல்ஏவுமான பி டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்களுக்கு சொந்தமான தொகுதியான மதுரை மாநகராட்சிக்கு 75 வது வார்டு வசந்த நகர் இரண்டாவது தெருவில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பாதாள சாக்கடை நீரானது சாலையில் வழிந்து ஓடுகிறது இதனை தூய்மைப்படுத்தும் பணியில் இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியாளர்களுக்காக வழங்க வேண்டிய எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மனிதக்கழிவுகளை கையில் அழுவது சட்டப்படி குற்றமாகும் மேலும் விஷவாயு தாக்கி அபாயம் இருப்பதாலும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் கழிவுகளை எடுப்பதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் எவ்வளவோ நவீன இயந்திரங்கள் வந்திருந்தாலும் மனித கழிவுகளை இன்னும் மனிதர்களை அல்லும் அவலம் மதுரை மாநகராட்சியில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை மின் மோட்டார் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய முற்பட்ட பொழுது மூன்று நபர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சிய போக்குடன் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் அறிவுரை உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் வெறும் கைகளாலேயே கழிவுகளை அகற்றியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையை முன்வைக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை