மதுரை திருநகர் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 7 லட்சம் மோசடி: மின்வாரிய அதிகாரி கைது - அரசு பள்ளி பெண் ஆசிரியைக்கு போலீசார் வலைவீச்சு.
மதுரை திருநகர் SRV நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்-சாந்தி தம்பதியினர் இவர்களுக்கு திருமணம் ஆகி 21 வயதில் மகன் உள்ளார். மகன் படித்து முடித்து விட்டு தமிழ்நாடு அரசின் போட்டித் தேர்விற்கு தயாராகி வருகிறார். இந்தநிலையில் மதுரை கூடல்நகர் சீனிவாச நகர் பகுதியில் சேர்ந்த உதயகுமார் சிவகங்கை உறங்கான்படடியில் மின்சார வாரியத்தில் வணிக ஆய்வாளர்(commercial inspector) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுமதி ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் சாந்தியின் மகனுக்கு தமிழ்நாடு அரசு மின்சார துறையில் (TNEB) வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் இருந்து 7 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளனர். மேலும் பணம் பெற்றுக் கொண்டு பல மாதங்கள் ஆகியும் தங்களது மகனுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தராததால் சந்தேகம் அடைந்த வேல்முருகன்- சாந்தி தம்பதியினர் இதுகுறித்து உதயகுமார் மற்றும் சுமதியிடம் முறையிட்டனர். அதற்கு உதயகுமார் மற்றும் சுமதி தம்பதியினர் வேல்முருகன் மற்றும் சாந்தியை மிரட்டும் பாணியில் கொலை செய்து விடுவதாக கூறியுள்ளனர்.எனவே இதுகுறித்து சாந்தி திருநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்வாரிய அதிகாரி உதயகுமாரை கைது செய்து சுமதியை திருநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை