கோவில்பட்டியில் காய்கறி கடைக்காரர் வீட்டை உடைத்து 10பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் என்பவரது மகன் வெங்கடேஷ். இவர் நகராட்சி தினசரி சந்தையில் காய்கறி கடை வைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் , வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டி கதவு உடைக்கப்பட்டு இருந்தது மட்டுமன்றி, பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. மேலும் பீரோவில் வைத்திருந்த 10பவுன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்க பணம் காணமால் போய் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேஷ் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த பகுதியில் நடைபெற்றள்ள நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் ஒரு சிசிடிவி கண்காணிப்பு கேமரா கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
கருத்துகள் இல்லை