மன அழுத்தத்தை போக்கவும், உலக அமைதி வேண்டியும், உடல் நலத்தை பேணிக் காக்க வலியுறுத்தி ஒருநாள் யோகா பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோயில் வளாகத்தில் ஸ்ரீ யோகாலயா சார்பில் மன அழுத்தத்தை போக்கவும், உலக அமைதி வேண்டியும், உடல் நலத்தை பேணிக் காக்க வலியுறுத்தி ஒருநாள் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
மன அழுத்தத்தை போக்கவும், உலக அமைதி வேண்டியும்,நுரையீரல் பாதிப்பு, இருதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கும் வகையிலும் , உடல் நலத்தை பேணிக் காக்க வலியுறுத்தியும் கோவில்பட்டியில் ஸ்ரீ யோகாலயா அமைப்பு சார்பில் ஒருநாள் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த யோகா பயிற்சி முகாம் கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. டாக்டர். ஜனனி, யோகாலயா அமைப்பு நிர்வாகி யோகா குணா ஆகியோர் யோகா பயிற்சிகளை அளித்தனர். மன அமைதி, மனதினை ஒருங்கிணைப்படுத்துதல், நோய்கள் தாக்குதலில் இருந்து தடுப்பது தொடர்பான பல்வேறு யோகாசனங்கள் குறித்து எடுத்துரைத்து பயிற்சி அளித்தனர். இதில் திரளான மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை