• சற்று முன்

    கோவில்பட்டி அருகே உள்ள சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து


    கோவில்பட்டி அருகே உள்ள சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து - சிறிய காயங்களுடன் ஓட்டுநர் உட்பட இருவர் உயிர் தப்பினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம்  உள்ள மேலஈரால் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(33). எப்போதும்வென்றான் சேர்ந்த  மகாராஜன்(34).இருவரும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில்  தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு கனரக டிரைவராக வேலை பார்த்து வருகின்றனர்.  இருவரும் தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சிமெண்ட் கலவை ஏற்றிக் கொண்டு விளாத்திகுளம் அய்யனார்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது  லாரி திடீரென நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. லாரிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் சதீஷ்குமார் மற்றும் மகாராஜன் இருவரும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாத்திகுளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர்  வாகன இடுபாட்டில் சிக்கிய சதீஷ்குமாரை பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad