இராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையலில் முதல் நோபல் உலக சாதனை படைந்தனர்
இராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையலில் 100 நபர்கள் 100 விதமான உணவுகளை ஐந்து நிமிடம் 13 வினாடிகளில் செய்து முதல் நோபல் உலக சாதனை படைந்தனர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ஆரோக்கியமான இயற்கை உணவுகள் மற்றும் நம் பாரம்பரிய உணவுகளை இளைஞர்களுக்கும் இளைய தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சரண்யா என்ற சமூக ஆர்வலர் 100 நபர்களை வைத்து 100 விதமான இயற்கை உணவுகளை அடுப்பில்லாமல் சமையல் செய்து சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு .இந்த சாதனையில் தேனி. விருதுநகர். மதுரை .உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100 நபர்கள் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை நடுவர்கள் மத்தியில் சாதனை முயற்சி ஈடுபட்டனர் .
இந்த முயற்சியில் ஐந்து நிமிடம் 13 வினாடிகள் 100 நபர்களும் 100 விதமான இயற்கை உணவுகளை செய்து சாதனை படைத்தனர் நோபல் உலக சாதனை நடுவர்கள் டாக்டர் அரவிந்த். ஹேமத்குமார். வினோத்குமார். பரணிதரன்.ஆகியோர் உணவுகளை ருசித்து பார்த்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழ்களை வழங்கினர். சென்னை கோவை மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் நடைபெறக்கூடிய இது மாதிரியான போட்டிகளை இராஜபாளையத்தில் நடத்தியது பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர் ஏற்படுத்தி உள்ளது என இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சரண்யா தெரிவித்தார்..
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை