Header Ads

  • சற்று முன்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணியை மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.


    மதுரை  பெரியார் பேருந்து நிலையத்தில தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணியை  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம்,  தொடங்கி வைத்து அங்குள்ள பேருந்து பயணிகளிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். 


    பின்பு, அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:

    மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நடத்த அரசு உத்தரவிட்டதின் பேரில், இந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, தொடக்கமாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் பயணிகளின் பாதுகாப்பு, பாதசாரிகளின் கவனத்திற்கு, ஓட்டுனர்களின் கவனத்திற்கு போன்ற துண்டு பிரசுங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, திருமங்கலம், மேலூர், உசிலம்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற  பேருந்து நிலையங்களில் விபத்தில்லா பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதனால், தற்போது விபத்துக்கள் குறைந்து வருவதோடு முற்றிலும் விபத்தில்லாத சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் கூடுதல் வழித்தடத்துடன் இயக்கப்படுகின்றன. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்கழகத்தில் உள்ள பணிமனைகளின் எண்ணிக்கை 40 ஆகும். இக்கழகத்தில் உள்ள மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 2300. இப்பேருந்துகளில் பயணிகளை பொறுத்தவரை 10.61 இலட்சம் நாளொன்றுக்கும், 318.30 இலட்சம் பயணிகள் மாதந்தோறும் பயன்படும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், அறிவித்த முக்கிய திட்டமான மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் தினசரி 5 இலட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பயணம் செய்து வருகிறார்கள். 

    மேலும், உயிர் பலி விபத்து ஏற்படுத்திய கழக மற்றும் தனியார் ஓட்டுநர்களுக்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய சிறந்த ஓட்டுநர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 500 நபர்களுக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட அனைத்து கிராமங்களுக்கும் இக்கழகம் பேருந்து சேவையினை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று பேசினார்.  இப்பேரணியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள்  ராகவன்,    சமுத்திரம், துணை மேலாளர்கள் அறிவானந்தம்,  ரவிக்குமார்,  முருகானந்தம், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) இரா.பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர்  சந்தான கிருஷ்ணன் போக்குவரத்து காவல் துறை உதவி ஆணையர்கள்  மாரியப்பன்,  செல்வின், ஆய்வாளர்  கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad