விருதுநகரில், சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகஜோதிமணி (42). கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு ஜெகஜோதிமணி தனது சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து கிடைத்த தகவலின் பேரி்ல், விருதுநகர் கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து, ஜெகஜோதிமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரண ஜெயஆனந்த், பாலியல் குற்றவாளி ஜெகஜோதிமணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
பெற்ற மகளை பாலியல் தொல்லை செய்த கொடூர தந்தைக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதால், திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில், இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை