கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி.
2023 தைப்பொங்கலை புகையில்லா பொங்கலாக கொண்டாடுவோம், மாசற்ற பொங்கலாக கொண்டாடுவோம் எனவும் உறுதிமொழி ஏற்பு - டி கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ,வருகிற 15-ம் தேதி தைப்பொங்கல் தினத்தை புகையில்லா பொங்கலாகவும் , மாசற்ற பொங்கலாகவும் கொண்டாடுவோம் என உறுதிமொழி ஏற்ற அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்,இது குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த, பேரணியாக டி. கல்லுப்பட்டி பேருந்து நிலையம் வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். முன்னதாக டி. கல்லுப்பட்டி பேரூராட்சி வளாகத்தை சுற்றிலும் புகையில்லா பொங்கல் என்ற வாசகத்துடன் வண்ண, வண்ணக்கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை