Header Ads

  • சற்று முன்

    அரிசி கடத்தலில் ஈடுப்பட்ட 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு, அனைத்து நியாய விலை கடைகளிலும் தரம் உயர்த்தப்பட்ட பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை



    அரிசி வேண்டாத பொதுமக்கள் ரேசன்கடைகளில் தகவல் தெரிவிக்க - கூட்டுறவு செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கை.

    மதுரை திருநகரில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட பாண்டியன் கூட்டுறவு சிறப்பு அங்காடியினை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு பாண்டியன் கூட்டுறவு சிறப்பங்காடி நவீன மயக்கம் ஆக்கப்பட்ட கடைகளை பார்வையிட்டேன்இதற்காக நிர்வாக இயக்குனர் மற்றும் ஜே ஆர் ஐயோருக்கு பாராட்டுதலை தெரிவிக்கிறேன். கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்பு ஆகியவற்றில் இரண்டு அமைச்சர்களின் செயல்படுகிறது இந்த ஆண்டு விவசாய கடனுக்காக பத்தாயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க உறுப்பினர்களில் 14 லட்சத்தி 84 ஆயிரம் பேருக்கு சுமார் 10,290 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களில் புதிய உறுப்பினர்களாக 2 லட்சத்து 25 ஆயிரத்து 939 பேர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு 1417.12 கடன் வழங்கப்பட்டுள்ளது.


    நூறாண்டும் மே 24ஆம் தேதி முதல் குருவை நெல் சாகுபடி தொடங்கப்படும் இந்த ஆண்டு குருவை மற்றும் சம்பா நெல் சாகுபடிக்கா 9 லட்சத்து 60 ஆயிரத்து 372 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடைக்காட்டிலும் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் நேரடி கொள்முதல் நிலையங்களாக 3504 நிலையங்கள் திறக்கப்பட உள்ளது. தற்போது 17, ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படுவது முப்பதாயிரம் மெட்ரிக் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

    உலகத்தில் மொத்தம் 35 ஆயிரம் நியாய விலை கடைகள் உள்ளன இவற்றில் 25 ஆயிரம் கடைகள் முழு நேர கடைகளாகும் பத்தாயிரம் கடைகள் பகுதி நேர கடைகளாகவும் செயல்பட்டு வருகிறது தமிழக அரசு கொண்டு வந்த நம்ம ஊரு நம்ம நியாய விலை கடை திட்டத்தின் கீழ் 4845 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதுஆறில் ஒரு மடங்கு கடை என்ற முறையில் கணக்கில் வரும். தோப்பூர் மற்றும் கப்பலூர் பகுதிகளில் நெல் சேமிப்பு கிடங்கில் திறந்த வெளியாக நெல் நனைவதாக கூறியதையடுத்து. 106 மேற்கூரை கிடங்கு அமைக்க 106 கோடி மதிப்பில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை 2014ல் சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்யப்பட்டு பின்னர் இடம் தேர்வில் மதுரை என உறுதிசெய்யப்பட்டது.

    முதல் கட்டமாக 206 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு நிதியாக 1869 கோடி ஒதுக்கீடு செய்யபட்டது. ரேசன் அரிசி கடத்த குறித்த கேள்விக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவம் வேதனையளிக்கிறது. திருச்சி, திருவண்ணாமலை குடியாத்தம் ஆகிய இடங்களில் சோதனை கடத்தல் அரிசி கைப்பற்றப்பட்டது. 132 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    உணவு பாதுகாப்பு திட்டத்தில் முதல்வர் ஆலோசனையின்படி 2 துறை அமைச்சர்கள் செயல்படுகின்றனர். பொதுமக்கள் தங்கள் விழிப்புணர்வு விதமாக தேவையென்றால் அரிசி பெற்றுக்கொள்ளலாம், அதே போல் சீனி பெற்றுக்கொள்ளலாம். 

    இதை அரிசியை வாங்கி வெளியில் கொடுப்பது தவறு. ரேசன் கடைகளில் தரமற்ற பொருள் விநியோகம் குறித்து.?

    முதல்வரின் வழிகாட்டுதலில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தாமற்ற பொருட்கள் ரேசன் கடைகளுக்கு வந்தால் அவற்றை திரும்ப மாற்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய அரிசிகள் கடைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் தரம் உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad