ராஜபாளையத்தில், வாக்காளர் தின விழிப்புணர்வு சைக்கிள் பேரணி.....
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில், வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி துவக்கி வைக்கப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகள் வழியாக, காந்தி சிலை வரையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் சேத்தூர், சேவுகபாண்டியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் உட்பட வருவாய்த்துறை அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை