சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் வெள்ளாவி கருப்பணசாமி பொங்கல் விழா கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு
மதுரை மாவட்டம் சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில் உள்ள வெள்ளாவி கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடாய் வெட்டி சாமிக்கு படைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பெண்கள் குலவையிட்டு சாமியாடி அருள் பெற்றனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் வார்டு கவுன்சிலர் நிஷா கௌதமராஜா மற்றும் சோழவந்தான் பகுதியை சுற்றியுள்ள சலவைத் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ஆர் சி தெருவில் பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை சோழவந்தான் சலவை தொழிலாளர் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் செந்தில், பொருளாளர் ராஜபாண்டி மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை