மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
கோவை சிறுமுகை அருகே 'டாஸ்மாக்' கடைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் 'டாஸ்மாக்' கடைக்குள் நேற்று முன்தினம் பெட்ரோல் நிரப்பிய இரு பாட்டில்களை வீசி, தீப்பற்ற வைத்துவிட்டு ஒருவர் தப்பினார்.
இதில், கடையில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து சேதம் அடைந்தன.இதுகுறித்து, கடை சூப்பர்வைசர் விஜய் ஆனந்த், சிறுமுகை போலீசில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், பெட்ரோல் குண்டு வீசியது, சிறுமுகை-அன்னுார் ரோட்டில் உள்ள ஆனைப்பள்ளிபுதுாரை சேர்ந்த கட்டட தொழிலாளி, கார்த்திக், 25, என்பது தெரியவந்தது.
போலீசார் அவரை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில்,'டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு, அதே பாட்டில்களில் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து, கடையின் உள்ளே வீசி தீப்பற்ற வைத்துள்ளார். மதுபோதையில் பெட்ரோல் குண்டுகளை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது' என்றனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை