மதுரை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தண்டலை ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளது. சுமார் 1000 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி மன்ற தலைவராக வீரலட்சுமி ஜெயக்குமார் உள்ளார் ஊராட்சி செயலாளராக ராஜேஷ்.என்பவர் இருந்து வருகிறார். ஊராட்சியின்1வது வார்டில்20க்கும் மேற்பட்ட.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர் சாக்கடை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவரிடமும் யூனியன் அலுவலரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து குடியிருப்பு வாசிகள் சார்பாக கருப்பண்ணன் என்ற ரவி.என்பவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு சாக்கடை வசதி வேண்டி மனு அளித்த நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில் சாக்கடை வசதி உள்ளது என்று தவறுதலாக பதில் அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் தகவலறிந்த தண்டலை.வடக்கு தெரு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் இது குறித்து கேட்டறிய ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர் தகவல் அறிந்து ஊராட்சி செயலாளர் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டதாக தெரிகிறது
இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் அருகில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்று முற்றுகையிட்டு தங்களுக்கு சாக்கடை வசதி கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால்ஊராட்சி மன்ற தலைவர் செய்வதறியாது தவித்தார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ஊராட்சி மன்ற அலுவலகம் அடிக்கடி பூட்டி கிடப்பதால் பொதுமக்கள் எப்போது சென்றாலும் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரை பார்க்க முடியவில்லை இது குறித்து உரிய விசாரணை செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு சாக்கடை கழிவு நீர் வெளியேறும் வசதி செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை