நாதன் அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளியில் 80 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் திறப்பு.
காட்டம்பட்டியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள் இல்லை.இதையடுத்து, வெளிநாடு வாழ் தமிழரான சாமிநாதனின் வி.பி.எஸ். நாதன் அறக்கட்டளை சார்பில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆறு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நடந்தது. இதில், வெளிநாடு வாழ் தமிழர் சாமிநாதன் கட்டடத்தையும், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார், வாழ்வியல் பயிற்சியாளர் சந்திப் சபாபதி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.பள்ளிக்கு நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
அறக்கட்டளை தலைவர் சபாபதி, பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் இளமுருகன், செந்தில்குமார், தலைமையாசிரியர் பிரபாகரன், ஊராட்சி தலைவர் காயத்ரி உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன்
கருத்துகள் இல்லை