Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனாநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷே விழா,



    கோவில்பட்டி பகுதியில் பல்வேறு திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்,

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனாநாத சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷே விழா, கோவில்பட்டி மெயின் ரோட்டில் அமைந்துள்ள வணிக வைசிய சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மகேஸ்வரர் சமேத ஸ்ரீ மாலையம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷே விழா, கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் சீனிவாச நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷே விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து.திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்பாள், சாமிக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷே விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, நகரச் செயலாளர் விஜயபாண்டியன், நகரத் துணைச் செயலாளர் மாதவ ராஜா, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட மாணவர் அணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹேமலா, தொழிலதிபர்கள் ராஜகுரு, திருப்பதி ராஜா, ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தக்கார் உதவி ஆணையர் சங்கர், மற்றும் பழனி குமார், கோபி, கடம்பூர் மாயா துரை, உள்ளிட்டோர் அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad