• சற்று முன்

    கோவில்பட்டியில் திமுக கவுன்சிலர்க்கும் இடையே வாக்குவாதம் - பொறியாளரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டம்.


    கோவில்பட்டியில்  குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு செய்ய  சென்ற நகராட்சி பொறியாளர்க்கும் திமுக கவுன்சிலர்க்கும் இடையே வாக்குவாதம் - பொறியாளரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டம்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 5வது வார்டு வேலாயுதபுரம் பகுதியில் குடிநீர் பைப் லைன் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்காக கோவில்பட்டி நகராட்சி பொறியாளர் ரமேஷ்  அப்போதில் ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார் அப்போது அப்பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் லவராஜா குடிநீர் பைப் பதிக்கும் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனவும், அப்பணிகளை  முறையாக செய்துவிட்டு அதன் பிறகு குடிநீர் விநியோகம் செய்யும்படி தெரிவித்தார் அப்போது கவுன்சிலர் லவராஜாவுக்கும் நகராட்சி பொறியாளர் ரமேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர் ரமேஷ் கவுன்சிலர் லவராஜாவை நோக்கி ஒருமையில் அவதூறாக பேசியதாக கூறி  லவராஜா தலைமையில் அப்பகுதி மக்கள் பொறியாளர் ரமேஷ் வாகனத்தை முற்றுகையிட்டு பொறியாளர் ரமேஷை சிறை பிடித்தனர். தகவல் அறிநது அப் பகுதிக்கு விரைந்து வந்த போலீசார்  பேச்சு வார்த்தை நடத்தி சிறைபிடிக்கப்பட்ட பொறியாளர் ரமேஷை விடுவித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad