கோவில்பட்டி அருகே டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி ரூபாய் 1,50430 பணம் பறித்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் உள்ள முத்துலாபுரம் டாஸ்மார்க் கடையில் கடந்த 18-11-2022 அன்று இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்பசாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் பணியை முடித்து விட்டு கிளம்பும் பொழுது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடையில் இருந்த ரூபாய் 1,50430 பணத்தை பறித்து சென்றனர்.
இதுகுறித்து டாஸ்மார்க் சூப்பர்வைசர் ஐயப்பசாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் டாஸ்மார்க் கடையில் உள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த சங்கிலி கருப்பன் என்பவரின் மகன் விக்ரம் என்ற விக்கி வயது (22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்த் என்ற அசோக் வயது (29) ஆகிய இருவரையும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.... கைதான அசோக் என்பவனுக்கு வழிப்பறி, கொலை முயற்சி, திருட்டு உற்பட தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் 29 வழக்குகளும் விக்ரம் என்ற விக்கிக்கு (5) வழக்குகளும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை